Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையானது, திறைசேரி பிணைமுறி விவகாரம் சம்பந்தப்பட்டதொன்றல்ல என்பதும் அதற்கு அப்பாற்பட்ட விடயமொன்று என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி.யான உதய கம்மன்பில்ல, சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான, வாதப் பிரதிவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று (8) இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நீதிமன்ற விசாரணையில் இருக்கும் விடயமொன்று பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்பதைப் போன்றே விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் விசாரணையில் இருக்கும் விடயமொன்று தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது.
எனினும், வெளிவிவகார அமைச்சர் கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையானது திறைசேரி பிணைமுறி விவகாரம் சம்பந்தப்பட்டதொன்றல்ல என்பதும் அதற்கு அப்பாற்பட்ட விடயமொன்று என்பதும் தீர்மானம் எடுக்கப்படும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago