Freelancer / 2026 மார்ச் 05 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க கடற்படை, தங்களது துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்துள்ளதாக வெளியான தகவல்களை இந்திய வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகோர், 'ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க்' என்ற ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில் தற்போதைய மோதல் சூழலில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தகவலை பொய்யானது மற்றும் முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற மற்றும் புனையப்பட்ட கருத்துகளைப் பொதுமக்கள் நம்பக் கூடாது என எச்சரித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற இராணுவப் பயிற்சிகளை முடித்துவிட்டுத் திரும்பிய ஈரானியப் போர்க்கப்பல் மீது, இலங்கை அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் குறித்த ஆய்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த மறுப்பு வெளியாகியுள்ளது. (a)
13 minute ago
27 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
40 minute ago