Nirosh / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதகுருமார்களை நாங்கள் மதிக்கின்றோம். அவர்களை நாங்கள் மதிக்கும் அளவுக்கு அவர்களும் நடந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஒவ்வொரு ஆட்சியிலும் அடாவடித்தனமாக நடந்துகொள்ளும் அம்பிட்டிய சுமணரதன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்கர்கள் புனர்வாழ்வளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்த அவர், ‘அரச அதிகாரிகளுக்குத் தடையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார். அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர், நேற்று (நேற்றுமுன்தினம்) நடந்துகொண்ட விதம் தொடர்பாக திருப்தியடைய முடியாதெனத் தெரிவித்த சாணக்கியன், நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காக, மாவட்ட எம்.பிக்கள் குரல்கொடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்து கொண்டுள்ளார். அவர் அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார் எனத் தெரிவித்த சாணக்கியன், பொலிஸாரை, கிராம சேவகரை, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை வீதிக்கு வருமாறு அச்சுறுத்தலும் விடுத்துள்ளார் என்றார்.
நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் அவருக்கெதிராக நிலுவையில் உள்ளன. எனினும், உரிய நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அவருடைய அருவருக்கத்தக்க செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல விரும்புகின்றேன் என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago