Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்னி மக்கள் சார்பாக, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட 20 அம்சக் கோரிக்கைகள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக, பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் உடனடியாக முன்னெடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதையடுத்தே, கோட்டாவுக்கு ஆதரவு வழங்க முன்வந்தோம் எனத் தெரிவித்தார்.
பிரபா கணேசனால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம பாதைகள் செப்பனிடல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களின் விடயத்தில் மனிதாபிமான முறையில் தீர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகள் தமது கட்சியால் முன்வைக்கப்பட்டதாகவும் அவரது ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
2 hours ago