2026 ஜனவரி 10, சனிக்கிழமை

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 13 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல்கைதிகளுக்கு ஆதரவாக, வவுனியாவிலுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று ​(13) ​காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தங்களை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து,  கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா கந்தசாமி கோவில் மண்டபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் தொடர்ச்சியாக 233 ஆவது நாளாக தங்கள் உறவுகளை விடுதலை செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .