Editorial / 2019 ஒக்டோபர் 19 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷத் தெரிவித்திருப்பது அரசியல் நாடகமென அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுப் பெற்றுத்தரப்போவதாக தெரிவித்திருப்பது தேர்தல் வாக்குறுதியெனவும் அவர் விமர்சித்துள்ளார்.
"39 வருடங்களின் பின்பு யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் கொடுத்துள்ளமை தொடர்பில் இனவாத கருத்துக்கள் வெளியிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழும் அரசகரும மொழி என்பதை இனவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இனவாதம் பேசி தமிழர்களின் வாக்குகளும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும தங்களுக்கு தேவையில்லை. என்ற நிலைபாட்டில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இனவாதத்தினை தூண்டி அதில் குளிர்காய்வதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருகிறது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago