Menaka Mookandi / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 319 நோயாளிகள், இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்களில் 83 பேர், தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் என்றும் ஏனைய 236 பேர், ஏற்கெனவே நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என்றும், அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், இன்றைய தினத்தில் மாத்திரம் 633 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மினுவங்கொட கொரோனா கொத்தணியில் உருவாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, மொத்தமாக 6,946 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், இராணுவத் தளபதி தெரிவித்தார்.
41 minute ago
48 minute ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
48 minute ago
14 Nov 2025
14 Nov 2025