Editorial / 2021 மார்ச் 02 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, இரணைத்தீவில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த அறிவிப்பு தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்தப் பதிவில்…
"உடல்(ஜனாஸா)களை இரணைத்தீவுக்கு அப்புறப்படுத்த எத்தனிக்கின்றனர். தவறான கதைகளைப் புனைந்துரைத்து, நெடுகிலும் அவர்கள் செய்வதே சரி என்று நிரூபிக்கவே விரும்புகின்றனர். நம்பிக்கை இழந்து , அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள சமூகத்தை துன்புறுத்துவதில் அவர்கள் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. பரிதாபகரமான இனவெறி தலைவிரித்தாடுகின்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago