R.Maheshwary / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள, கம்பஹா மாவட்டத்தில் செயற்படும் ஏற்றுமதி நடவடிக்கை மற்றும் அது தொடர்பான தொழிற்சாலைகளை நடத்துபவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தடையாக அமையாதென, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் தொழிலுக்குச் செல்வதற்கும் வீடுகளுக்குச் செல்லவும் தாம் தொழில்புரியும் நிறுவனங்களின் அடையாள அட்டையை ஊரடங்கு உத்தரவு அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் ஊடாக வாகனங்கள் பயணிப்பதற்கு, எவ்வித தடையும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025