2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

’ஐயையோ அன்ரி அடிக்காதீங்க’ கதறியழும் குரல் கேட்கும்’

Editorial   / 2021 மார்ச் 01 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐயையோ, ஐயையோ அன்ரி அடிக்காதீங்க, அடிக்காதீங்க எனக் கடந்த இரண்டு, மூன்று நாள்களாக, கதறியழும் குரல் கேட்குமெனத் தெரிவித்த பிரதேசவாசிகள், வீட்டுக்குள் செல்லமுடியாது என்பதால், என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தோம் என்றனர்.

எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால், அச்சிறுமி கதறுவது எங்களுக்கு கேட்கும், மற்றுமொரு வீடும் அப்பெண்ணுக்கு உள்ளது. அந்த வீட்டுக்கும் சிறுமியை அழைத்துச் சென்று அடித்துள்ளார் என்றனர். 

பேயோட்டுவதாகக் கூறி, ஒன்பது வயதான சிறுமியைப் பிரம்பால் அடித்தமையால் அச்சிறுமி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பில், பிரதேசவாசிகள் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இறுதியாகப் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவித்தோம். பொலிஸார் வருவதற்கு முன்னரே, அச்சிறுமியை வைத்தியசாலைக்கு  அழைத்துக்கொண்டு, அப்பெண் புறப்பட்டாள். 

அந்தச் சிறுமிக்கு என்ன, காய்ச்சலா அல்லது டெங்கா என விசாரித்தோம். எனினும், எவ்விதமான பதிலையும் சொல்லாத அப்பெண், வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், அச்சிறுமியின் உடலில், பிரம்பால் அடித்திருந்தமைக்கான தழும்புகள் இருந்தன. 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X