J.A. George / 2020 நவம்பர் 09 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, ஜே.சி.அலவத்துவல, மயந்த திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு எதிராகவும் அதன் கௌரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடப்பட்டுள்ளமையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இவர்கள் ஐந்து பேரும் இன்று (09) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago