Editorial / 2020 ஜூலை 04 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கனகராசா சரவணன்)
தேர்தல் பிரசாரங்களை நடாத்த ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுச் சேர்க்க முடியுமாக இருந்தால், ஏன் இந்த இந்து மக்களுடைய அடிப்படை, கலாச்சார உரிமையான பாரிம்பரிய மத நம்பிக்கைகளை வணங்கச் செல்லும் கதிர்காம பாதை யாத்திரைகளை தடைசெய்ய வேண்டுமென மட்டக்களப்பு ஸ்ரீ மங்களார விகாரை விகாரதிபதியும் அம்பிட்டிய சுமணரத்தன தோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கதிர்காம பாத யாத்திரைகளை நிறுத்தினார் இனி வரும் தினங்களில் என்ன நடக்குமென கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இந்து மக்களுடைய பாரிம்பரிய மத நம்பிக்கைகளை அடிப்படைய கொண்டு பல வருடங்களாக தங்களுடைய சொத்துக்களை விடுத்து இறைவன் மீது உள்ள பற்றின் காரணமாக பல கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று கடவுளை தலைகுனிந்து வணங்குகிறார்கள்.
ஆனால் தற்போது அதுத் தடைச் செய்யப்பட்டுள்ளது. இந்து மத அனுஷ்டானங்களில் ஈடுபட அனுமதி வழங்கவில்லையாயின் அதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுப்போம். ஆர்ப்பாட்டம் செய்வோம்.” எனவும் கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago