Editorial / 2021 ஜனவரி 21 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அயல் நாடுகளுக்கான கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தை ஆரம்பித்துள்ள இந்தியா, இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கான விநியோகப் பணிகளை ஆரம்பிக்கும் முன்னர், அந்நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை, குறித்த நாடுகள் உறுதிப்படுத்தும் வரையிலும் காத்திருக்கிறது என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
பூட்டான், மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம், மியன்மார், சிஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கான தடுப்பூசி விநியோகப் பணிகள் நேற்று (20) ஆரம்பமாகின. இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் ஆகிய நாடுகளிலிருந்தே அனுமதிக்காக இந்தியா காத்திருக்கிறது என உயர்ஸ்தானிகராலயம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளைப் போலவே, சுகாதார சேவை வழங்குநர்கள், முன்னரங்க ஊழியர்கள், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை உள்ளடக்கும் வகையில் இந்த நோய்த் தடுப்புத் திட்டம் இந்தியாவில் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்படுகிறது.
உள்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் படிப்படியாக வழங்குவதைக் கருத்தில் கொண்டுஇ நட்பு நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை எதிர்வரும் வாரங்களிலோ, மாதங்களிலோ ஓர் அட்டவணையின் கீழ், இந்தியா தொடர்ந்து வழங்குமென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
.
தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர், நோய்த் தடுப்பு முகாமைத்துவத்தினர், தடுப்பூசிகளுக்குரிய குளிரூட்டியுடனான விநியோகப் பிரிவினர், தகவல் தொடர்பு அதிகாரிகள், மருந்தைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளின் அதிகாரிகள்இ உள்ளிட்டோருக்கு தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 நோய் பரவிய காலப்பகுதிகளின்போது hydroxychloroquine, Remdesivir and paracetamol மாத்திரைகள், நோய் நிர்ணய கருவிகள், வென்டிலேட்டர்கள், முகக்கவசங்கள், கையுறைகள், பிற மருத்துவப் பொருட்களை இந்தியா ஏராளமான நாடுகளுக்கு வழங்கியிருந்தது.
தற்போது நடைமுறையில் உள்ள முயற்சியாகஇ இந்தியா உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு, தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கும். இது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான உள்நாட்டு தேவைகள், சர்வதேச தேவைகள் கடப்பாடுகளுக்கு எதிராக அளவீடு செய்யப்படும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
35 minute ago
42 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
8 hours ago