2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தில் திருத்தம்?

Freelancer   / 2025 ஒக்டோபர் 25 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட வரம்பு 15% ஆக இருந்தாலும், அது திருத்தத்திற்கான அதிகபட்ச வரம்பு மட்டுமேயாகும் அன்றி, தீர்மானிக்கப்பட்ட மதிப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத கட்டணத் திருத்தம் பொதுவாக மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், இந்த ஆண்டுக்கான கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X