2026 மார்ச் 05, வியாழக்கிழமை

சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

A.Kanagaraj   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின், சபை நடவடிக்கைகளில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக, சபை நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஒத்திவைக்கப்பட்டன.

இதனையடுத்து, கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகளின் கொடுப்பனவுகள் இல்லாமற் செய்யப்படுவதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து சபையில் உரையாற்றினார்.

தன்னுடைய, கேள்விக்கு அரசாங்கம் உரிய பதிலை இப்போதே வழங்கவேண்டுமென்றும் அவர்  கோரிநின்றார்.

எனினும், விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இன்மையால், இக்கேள்விக்கு, பிறிதொரு தினத்தில் பதிலளிக்கப்படும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அதற்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததையடுத்தே, சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .