2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

சேமலாப நிதி: சேவையைப் பெற அழையுங்கள்

Menaka Mookandi   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை, அருகிலுள்ள தொழில் அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் 26அம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், அவ்விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நேரத்தை, தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும், தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,   சேமலாப நிதி தொடர்பான சாதாரண சேவைகளைப் பெறுவதற்கு, 011-2368904, 011-2368911, 011-2368490 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தியோ 30 சதவீத நிதியைப் பெற்றுக்கொள்வதாயின், 011-2368250, 011-2501249 போன்ற இலக்கங்களுக்கும் அழைப்பை ஏற்படுத்தி, நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமென்று, திணைக்களம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--