2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; நால்வர் கைது

Nirosh   / 2021 ஜனவரி 18 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

8 வயது சிறுவனுக்குப் பாரதூரமான பாலியல் தொல்லை கொடுத்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16,17,18 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும், அவரதுத் தந்தை வேறொரு திருமணம் செய்துக்கொண்டு வேறொரு பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .