எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுய விருப்பத்துடன் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லை என வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவி குறித்த நிலைப்பாட்டை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, மன்னாரில் அமைந்துள்ள அமைச்சின் உப அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டெனீஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர் மட்டக் கூட்டம் கட்நத 12 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா அலுவலகத்தில் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அங்கு சென்று அவர்கள் கேட்ட விளக்கங்களுக்கு எனது நிலைப்பாட்டினை தெளிவாகத் தெரிவித்தேன்.
எனினும் ஒரு சில தினங்களில் அமைச்சுப்பொறுப்பை விட்டுத்தருவது தொடர்பில் முடிவெடுத்து தெரிவிக்குமாறு கூறினர்.
இந்த நிலையில் எனது நிலைப்பாட்டினை இன்றைய தினம் தெரிவிக்கின்றேன். அன்று எதைச் சொன்னேனோஇ அதையே தான் இப்போதும் சொல்கிறேன். சுய விருப்பின் பேரில் பதவி விலகப் போவதில்லை என்றார்.
32 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
3 hours ago
5 hours ago