Kogilavani / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த, சகல பதவிகளிலிருந்தும், தான் விலகிக்கொண்டதுடன், அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துகொண்டதாக, வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என்று, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, தன்னுடைய பேஸ்புக்கில், பதிவொன்றை இட்டுள்ளார்.
“இணையத்தளங்கள் சில மற்றும் சமூக வலைத்தளங்கள் சிலவற்றிலேயே, மேற்படி செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தி, தவறானது. அச்செய்தியை தான் கண்டிக்கின்றேன்” இதேவேளை, என் தொடர்பிலான சகல, சரியான தகவல்களையும், என்னுடைய அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும், உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தின் ஊடாகவும் சகல மக்களையும் விரைவில் தெளிவுப்படுத்துவேன் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 minute ago
12 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
1 hours ago
2 hours ago