Editorial / 2020 ஜனவரி 21 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக ஊடகங்கங்களில் இஸ்லாம் மார்க்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் மூவருக்கு டுபாய் நீதிமன்றம் தலா 5 இலட்சம் திர்காம் அபராதம் விதித்துள்ளது.
அந்த பணத்தின் இலங்கை பெறுமதி தலா சுமார் இரண்டரை கோடி ரூபாயாகும்.
டுபாயில் உள்ள 5 நட்சத்திர விடுதி ஒன்றில் பாதுகாப்பு ஊழியர்களாக கடமையாற்றிய 28 முதல் 34 வயதுடைய மூவருக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபாராத தொகையை செலுத்திய பின்னர் மூவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இன்ஸ்டகிராம் மற்றும் முகபுத்தகம் ஆகிய சமூக ஊடகங்களை பயன்படுத்தி அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டதாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், கடந்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி பார்ஸா பொலிஸார் டுபாய் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
11 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago