2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு சென்ற பஸ் பளையில் விபத்து

J.A. George   / 2020 நவம்பர் 27 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளுடன் யாழ். விடத்தல் பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு பயணித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

கிளிநொச்சி பளை - ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பஸ்,  வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதியிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை,  காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக  யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். 

ஓமான் நாட்டிலிருந்து திரும்பிய 254 பேரை  11 பஸ்களில் அழைத்து வந்த போது, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .