2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

’தமிழர்களுக்கு படுகொலைகள் புதிதல்ல’

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தால் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிறைச்சாலை படுகொலைகள் புதியவையல்ல என்றார்.

இன்று (2) எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் 2012ஆம் ஆண்டு வெலிகட சிறையில் கைதிகள் கொல்லப்பட்டனர். வுpசாரணைகள் முடிவடைந்தும் இந்த கொலைகளுக்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.

அதேப்போல் தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத கொலை தான் 1983ஆம் ஆண்டு வெலிக்கடயில் நடைபெற்றது. தமிழ் கைதிகள் அடையாளப்படுத்தப்பட்டு சிறை காவலர்களாலும் சகோதர கைதிகளாலும் கொல்லப்பட்டனர்.

 1997ஆம் ஆண்டு களுத்துறையிலும் 2000 ஆம் ஆண்டு பிந்துனுவௌ சிறையிலும் தமிழ் கைதிகள் அடித்துக்கொல்லப்பட்டனர். எனவே தமிழ் மக்களுக்கு சிறைச்சாலை கொலைகள் புதிதல்ல என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .