2020 ஜூலை 15, புதன்கிழமை

தேர்தல் சிறப்பு ஒத்திகை

Editorial   / 2020 ஜூன் 07 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய, சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் வகையில், இன்று (07) சிறப்பு ஒத்திகை தேர்தல் நடைபெறவுள்ளது. 

அம்பலாங்கொடை-வில்லேகொடை விஹாரை மண்டபத்தில் இந்நிகழ்வு, மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 12.00 மணி வரை நடைபெறவுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன்போது, சுகாதார வழிமுறைகளுக்கமைய வாக்களிப்பு நிலையத்தை அமைத்தல் மற்றும் வாக்களிக்க வாக்காளர் ஒருவர் செலவு செய்யும் நேரம் என்பன குறித்து ஆராயப்படவுள்ளது.

இந்த ஒத்திகை நிகழ்வில், 200 வாக்காளர்கள் பங்குற்றவுள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X