Editorial / 2020 ஜூன் 03 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு தற்போது, சாதாரண நிலைக்கு வரவில்லை என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நிலையில் அது தெளிவாக தெரிவதாக, அந்தக் கட்சி கூறியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதுடன், தினந்தோறும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 04 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு சாதாரண நிலைக்கு வந்திருந்தால் இவ்வாறான ஊரடங்கு சட்டம் அமுலப்படுத்தப்படும் தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
22 minute ago
33 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
59 minute ago
2 hours ago