A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை காலை (24) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மீன் விற்பனையாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் 40 பேரில் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி கண்டல்குழி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேலியகொட மீன் சந்தைக்கு அன்றாடம் மீன் விற்பனைக்காக சென்றுவரும் மீனவர்கள் மற்றும் லொறி சாரதிகள் 40 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த நபர் திடீரென உயிரிழந்துள்ளார். பிசிஆர் பிரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்னரே அந்த நபர் உயிரிழந்துவிட்டாரென வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த நபரின் சடலம் கற்பிட்டி வைத்தியசாலையிலிருந்து பூரண பாதுகாப்புடன் புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
“உயிரிழந்த நபரின் இரத்த மாதிரிகள் தற்போது பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கற்பிட்டி மற்றும் புத்தளம் பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
இதேவேளை, காலி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த மீனவரொருவர், திடீரெனெ ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, இன்று (24) காலை உயிரிழந்துள்ளார் என்று, காலி துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago