2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மஹர சிறையில் முக்கிய ஆவணங்கள் தீக்கிரை

S. Shivany   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 107 பேர் கைதிகள் எனவும் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இறுதியாக அனுமதிக்கப்பட்ட கைதிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவத்தையடுத்து,  மஹர சிறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, விசாரணைக்காக ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவத்தின் பின்னணியை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

காயமடைந்த சிலர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதுடன்,  8 பேர் மேற்படி கலவரத்தில் உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .