ஆர்.மகேஸ்வரி / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவால் கைதுசெய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சராக இவர் பதவி வகித்த காலத்தில் கரம் போர்டுகளை கொள்வனவு செய்து, 39 மில்லியன் நிதியை அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான போதே கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னர் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவ பெர்ணான்டோ கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago