2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

மிஹிந்தலைக்கு சென்றார் ஜனாதிபதி

Editorial   / 2020 ஜூலை 04 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரம் மிஹிந்தலையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்து ஆரண்ய சேனாசனவில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

கி.மு. 5,6 நூற்றாண்டுகளைச் சேர்ந்த மிஹிந்து ஆரண்ய சேனாசன சியம் மகாநிக்காயவின் ஸ்ரீ ரோஹன பிரிவின் வனவாசி சங்க சபையின் தலைமை பீடமாகும்.

இன்று (04) முற்பகல் மிஹிந்து ஆரண்ய சேனாசனவிற்கு வருகை தந்த ஜனாதிபதி, சேனாசனாதிபதி சியம் மகா நிக்காயவின் ஸ்ரீ ரோஹன பிரிவின் வனவாசி சங்க சபையின் தலைமை சங்க நாயக்கர் சங்கைக்குரிய கல்பாத சுமன தேரரை சந்தித்து சுக துக்கங்களை கேட்டறிந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--