2026 மார்ச் 05, வியாழக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்துக்கு இரு புதிய கட்டடங்கள்

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று (02) தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அமைச்சர் குறிப்பிட்டதன் பிரகாரம், யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல்,  தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொகுதி, தொழில்நுட்ப பிரிவு என்பவற்றுக்காக புதிய கட்டடம் மற்றும் மருத்துவ பீடத்துக்கான 08 மாடிகளைக் கொண்ட பயிற்சி கட்டடம் ஆகியவை நிர்மாணிக்கப்படவுள்ளன.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தினை உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .