Nirshan Ramanujam / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் கோப்பாயில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இன்று (02) தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில்,
வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவரை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். அதில் பிரதான சந்தேக நபரும் அடங்குவார். அவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவர் ஆவா குழுவில் அங்கம் வகித்தவர்கள் என்றார்.
4 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago