2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

ரிஷாட் - மனோ - திகா, பிரதமருக்கு ஆதரவு

Editorial   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பி​ரேரணைக்கு எதிராக வாக்களிப்பதென, ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய, அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் தலைமை வகிக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர்.

இதற்கு முன்னதாக, ஜாதிக்க ஹெல உறுமய மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமருக்கு ஆதவாக வாக்களிப்பதென அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .