2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

ஜோர்டானிலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

Freelancer   / 2026 மார்ச் 01 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, ஜோர்டானில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கான விசேட பாதுகாப்பு வழிகாட்டல்களை ஜோர்டானிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

ஜோர்டானில் உள்ள இலங்கையர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஜோர்டான் அரச அதிகாரிகள் மற்றும் தூதரகம் அவ்வப்போது வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் அவசர நிலை ஏற்படும் பட்சத்தில், இலங்கையர்கள் கீழ்க்காணும் எண்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக தூதரகப் பொறுப்பாளர்: 00962 781365773
கொன்சுலர் அதிகாரி: 00962 781548585
அவசர இலக்கம் (Hotline): 00962 – 777313323
மின்னஞ்சல்: slemb.amman@mfa.gov.lk

மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழலால் தங்களின் பாதுகாப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு ஜோர்டான் வாழ் இலங்கையர்களைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .