Editorial / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில் ஆடை விநியோக வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இதன்படி, குறித்த மனு தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 20ஆம் திகதி ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்:
’மஹிந்தவுக்கு எதிராக வழக்குத் தொடரலாம்’ -
‘இருவரையும் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே பார்க்கலாம்’ -
‘கொள்ளையர்களுக்கு சீன உணவு வழங்கப்படுகிறது’ -
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .