2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

வாசுவுடன் இருந்தவர்களுக்கு தொற்றவில்லை

R.Maheshwary   / 2021 ஜனவரி 17 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை  என பத்தரமுல்ல பொது சுகாதார அதிகாரி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதென நீர் வழங்கல் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் அமைச்சின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் எந்தவொரு அதிகாரிக்கும் அழைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் சாரதி உள்ளிட்ட எவரும் கொரானா தொற்றுக்கு உள்ளாகவில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி உறுதிபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் அவரது செயலாளரும் தற்போது கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனரெனவும் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .