2026 மார்ச் 05, வியாழக்கிழமை

வடக்குப் பிரச்சினைகளை ஐ.நா.விடம் எடுத்துரைத்தார் முதல்வர்

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் இன்னும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் மக்களுடைய பயிர்நிலங்களையும் அலுவலக கட்டடங்களையும் இயற்கை வளங்களையும் அவர்கள் உபயோகித்து வருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் ஊனா மெக்கோலேய் தலைமையிலான குழுவினருடனான சந்திப்பு, கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்துகின்றனர். தெற்கிலிருந்து பிரசித்தமாகவே மீனவர்களை அழைத்து வருவதுடன் அந்த மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர். வடக்கு மீனவ சமுதாயத்தினர் அச்சப்படுவதற்கு இது பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதாரண நடைமுறைகளை மீறிய விதத்தில், காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லிம்களுக்காக வீதிகளும் வீடுகளும் அமைக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .