2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு குற்றங்களுக்கு இலங்கையில் தண்டனை

R.Maheshwary   / 2020 நவம்பர் 29 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் குற்றங்களில் ஈடுபடும் இலங்கையர்களுக்கு அக்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் சட்டநடவடிக்கை எடுக்க முடியுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு தண்டனைச் சட்ட திருத்தத்துக்கமைய, வெளிநாடுகளில் இலங்கையர்கள் செய்யும் குற்றங்கள், இலங்கையின் சட்டத்துக்கமைய தவறெனின், குற்றமிழைத்த இலங்கையர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

ஜப்பான் யுவதியொருவரை இலங்கையர் ஒருவர் கடத்தி வந்துள்ளமை தொடர்பில், இன்று காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .