Editorial / 2020 நவம்பர் 27 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவரின் புகைப்படத்தை முகநூலில் நேற்று வியாழக்கிழமை (26) பதிவேற்றிய பிறந்ததின வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 4 பேரை நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேரை முதலில் அடையாளம் கண்டு அவர்களை நேற்று இரவு கைது செய்தனர்
இதில் இரண்டு நகைக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள். புதிதாக பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற ஒருவர் உட்பட 4 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்
இதில் கைது செய்தவர்களின் பெயரிலுள்ள முகநூலில் குறித்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த 90 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
23 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
2 hours ago