2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வெளிநாடு செல்ல மாலுமிக்கு தடை

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீப்பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலின் மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னதாக மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.

இது தொடர்பான உத்தரவு இன்று (28)  பிற்பகல் 2 மணியளவில் வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,  குறித்த கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கே உள்ளதாக நீதவான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, மாலுமியின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தின் உத்தரவு இன்றி வெளிநாட்டுக்கு செல்ல முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--