Editorial / 2020 நவம்பர் 29 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் டன்பார் தோட்டத்தில் சுயதனிமை படுத்தப்பட்டிருந்த ஒன்பது பேரில் ஒருவர் மரணமடைந்தார்.
இதனை, அம்பகமுவ கொரோனா தடுப்பு சுகாதர பிரிவு அதிகாரி பி.தேவன் உறுதிப்படுத்தினார்.
84 வயதுடைய வயோதிபப்பெண்ணே, இன்று (29) மாலை உயிரிழந்தார். இவர், ஒரு பிள்ளையான தாய்.
இவரின் பேரப்பிள்ளை கொழும்பு-பம்பலபிட்டி பகுதியிலிருந்து வருகைத்தந்திருந்த நிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்
ஹட்டன் விசேட மரண விசாரணை அதிகாரி எ.ஜே.எம். பஷீர் முஹமட், உயிரிழந்த நபரின் பி.சி.ஆர் பரிசோதணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்கு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்குமாறு ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்
இந்நிலையில், அந்த வீட்டிலுள்ள ஏனைய எட்டு பேருக்கும் பி.சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அம்பகமுவ கொரோனா தடுப்பு சுகாதார பிரிவு அதிகாரி பி.தேவன் தெரிவித்தார்
1 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago