2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

'13 ஆவது திருத்தத்தை நாமே தடுத்தோம்'

Kanagaraj   / 2013 ஜூலை 23 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

நாமிருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளோமே தவிர அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை.

அரசாங்கத்திலிருந்து வேண்டிய நேரத்தில் எம்மால் வெளியேறவும் முடியும் என்பதுடன் 13 ஆவது திருத்தத்தை நாமே தடுத்து நிறுத்தினோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரபா கணேசன், வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

மலையக தேசிய முன்னணி கொழும்புஇ நிப்போன் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட் டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் பதிலளிக்கையில்,

13 ஆவது திருத்தத்தில் எவ்விதமான மாற்றங்களையும் செய்யக்கூடாது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் போது மலைய மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும் மற்றும் மலையக மக்களின் வீடு மற்றும் காணி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் போன்ற மூன்றம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தேர்தலில் மலையக தேசிய முன்னணியாக களமிறங்கியுள்ளோம்.

நாம், அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளோமே தவிர அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. அரசாங்கம், 13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கு முயற்சித்தது அதற்கு நாமிருவரும் கடுமையான எதிர்பினை வெளிப்படுத்தினோம்.

ஒரு சிறு திருத்தத்தையேனும் 13 ஆவது திருத்தத்தில் மேற்கொள்வதற்கு இடமளியோம். அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம் என்பதுடன் எங்களுடைய எதிர்ப்பினால் தான் 13 ஆவது திருத்தம் கைவிடப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

  Comments - 0

  • AMBI. Wednesday, 24 July 2013 07:02 AM

    ஐயோ... ஐயோ... அப்போ நீங்க நினைக்கிறிங்க 13இல் திருத்தம் ஏதும் இல்லை என்று. கொஞ்சம் பொறுத்திருங்கள், என்ன நடக்கப் போகிறது அப்போ நீங்கள் என்ன சொல்ல போறிங்க என்று தெரியும்...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .