Editorial / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்குவதில் சிக்கலான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதென படைக்கலச் சேவிதர் திணைக்களத் தகவல் தெரிவிக்கின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அறுவர் உட்பட 16 பேர், அரசாங்கத்தில் தாம் வகித்த சகல பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்ததையடுத்தே, இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதென அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.
இராஜினாமாச் செய்த 16 பேரும், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி பக்கமா அல்லது எதிர்க்கட்சி பக்கமா அமர்போகின்றோம் என்பது தொடர்பில், இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அதனால், இவ்வாறான சிக்கல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதென்றும், அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.
அதுமட்டுமன்றி, புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது. இதனால், அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னரே, ஆசனங்களை ஒதுக்கமுடியுமென, அந்தத் தகவல் தெரிவித்தது.
அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை உள்ளிட்டவற்றை இராஜினாமாச் செய்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரும், எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்து, ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளனர் என அறிவித்துள்ளமையால், அவர்களுக்கு ஜே.வி.பி எம்.பிக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்படக் கூடுமெனத் தகவல் தெரிவிக்கின்றது.
அவ்வாறு ஆசனங்கள் ஒதுக்கப்படுமாயின், எதிர்க்கட்சியின் பின்வரிசையில் தற்போது அமர்ந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஆளும் பக்கத்தில் பின்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்படக்கூடும் என்றும் அந்தத் தகவல் தெரிவித்தது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago