2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இறுதி நிகழ்வில் நெல்ஸன் மண்டேலா

A.P.Mathan   / 2010 ஜூலை 11 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் 19ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் நிறைவு விழா சற்றுமுன்னர் ஜொஹன்னஸ்பேர் சொக்கர் சிற்றி விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பித்திருக்கிறது.

இதுவரை காலமும் கண்டிராத லேசர் லைட் ஜாலங்கள் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தன. அத்தோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆரம்ப விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போயிருந்த தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்ஸன் மண்டேலா நிறைவு நாள் நிகழ்வில் பாரியார் சகிதம் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இன்னும் சற்று நேரத்தில் நெதர்லாந்து அணியினை எதிர்த்து ஸ்பெயின் அணி இறுதிப்போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--