Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜௌபர்கான், ஏ.லூயிஸ்)
மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக மாநகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து இன்று காலை முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு, அமிர்தகழி மாமங்கேஸ்வரர் ஆலய உற்சவத்தின்போது கடுமையாக தாக்கியதைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் காரணமாக மாநகரசபையின் நடவடிக்கைகள் யாவும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. அலுவலகம் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், அலுவலக வாயிலேயே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.செல்வாராசா, சீ.யோகஸ்வரன், டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தும் மாநகரசபை ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025