2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

அமைச்சர் றிசாட்-ஈரான் தூதுவர் சந்திப்பு

Super User   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்சாத் றஹ்மத்துல்லா)

ஈரான் பல்கலைக்கழகத்தில் இலங்கையர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் உயர் கல்வி  கற்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருவதற்கான இணக்கப்பாட்டை ஈரான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மொஹமட் றஹீமி ஜோர்ஜி வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரை கொழும்பிலுள்ள அமைச்சில் வைத்து சந்தித்த போது, அமைச்சர் றிசாத் பதியுதீன் தூதுவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இதனை தெரிவித்துள்ளார்.

அதே வளை வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள பகுதிகளின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கான உதவிகளை வழங்க ஈரான் அரசாங்கம் எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள தூதுவருக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது அரசாங்கத்தின நன்றிகளை தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--