2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி பிரயோகத்தில் கைதிகள் இருவர் காயம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் கைதிகள் இருவர் படுகாயமடைந்துள்ளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரனை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் மீதே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைவிலங்குடன் தப்பித்து செல்வதற்கு முயன்றபோதே சிறைச்சாலை அதிகாரிகள் அவர்கள் இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்ட மோட்டார் வாகனத்தில் சென்று கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவ்விருவருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகக்குறைந்து ஏழுதடவைகள் அவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் காயமடைந்த கைதிகள் இருவரும் நாககொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹொரனை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .