2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கூட்டமைப்பின் மே தினம் சாவகச்சேரியில்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , பி.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் இம்முறை சாவகச்சேரி நகர சபை மைதானத்தில் நடைபெறுமென தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கூட்டமைப்பின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்  திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாவை சேனாதிராசா ,

இம்முறை மே தின ஊர்வலம் புத்தூர்ச் சந்தியில் இருந்து ஆரம்பித்து சாவகச்சேரி நகர சபை மைதானம் வரையில் சென்று அங்கு மே தின நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர்கள், உளளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--