2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

தங்கச் சங்கிலியை அபகரித்த சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யட்டியன புஷ்பகுமார)

பெண்மணியொருவரது 60,000 ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள் இருவரும் குறித்த பெண்மணியை தாக்கி விட்டு தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, காலி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்மணி முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--