2021 ஜனவரி 27, புதன்கிழமை

விபத்தில் 3 வயது சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

ஹம்பாந்தோட்டை, பதகிரிய கிராமத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

பதகிரிய கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயதான முஹம்மது ரிஸ்வி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்தில் காயமடைந்த இந்த சிறுவன் ஹம்பாந்தோட்டை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளான்.

பொருட்களை விற்பனை செய்வதற்காக வந்திருந்த வான் மோதியே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தப்பிச்சென்றுள்ள வானின் சாரதியை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஹம்பாந்தோட்டைப்  பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .