2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஆணொருவரின் சடலம் மீட்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2020 மார்ச் 16 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ரொட்டவெவ காட்டுப் பகுதியிலிருந்து வவுனியாவைச் சேர்ந்த உக்குனைதேகே சைமன் அப்பு (70 வயது) என்பவர், நேற்று (15) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காட்டுப் பகுதியில் இராணுவத்தினர் பயணத்தின்போது, ஆணொருவர் விழுந்து கிடப்பதை அவதானித்து, பொலிஸ் நிலையத்துக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார், குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலத்துக்கு அருகில் அவரது அடையாள அட்டை பெறப்பட்டதாகவும் உணவு உட்கொண்டவாறு வீழ்ந்து கிடந்ததாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மரணம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .