Princiya Dixci / 2016 ஜூலை 18 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட்
திருகோணமலை, சூரியபுரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுர காட்டுப்பகுதியில் சூது விளையாடிய குற்றச்சாட்டின் பேரில் அறுவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை கைதுசெய்துள்ளதாக சூரியபுரப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் சூரியபுரப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெயந்திபுர காட்டுப்பகுதியில் சிலர் சூது விளையாடிக் கொண்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த காட்டுப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய போது இவர்கள் 06 பேரும் கைதுசெய்யப்பட்டதாக சூரியபுரப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
34 minute ago
40 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
40 minute ago
46 minute ago